ரஜினியை பத்தி கேட்காதீங்க-கடுப்பில் கே.வி.ஆனந்த்
நம்ம ஊர் எல்லா இயக்குனர்களுக்குமே ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
அந்த வகையில் அவர்களுக்காக எழுதி வைத்து இருக்கும் கதையை சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லிவிட்டு வருவார்கள். ஆனால் சொன்ன இடத்தில பல மாதங்கள் ஆகியும் பதில் வராமல் இருப்பது உண்டு. சரி வேறு வழியில்லை என்று மற்ற ஒரு நடிகருடன் படம் இயக்க சென்று விடுவார்கள்.
அது போல் தான் சமீபகாலமாக கே.வி.ஆனந்தை கண்டாலே ரசிகர்களும், மீடியாக்களும் ரஜினி படத்தை எப்போ இயக்க போகிறீர்கள் என்று கேட்டு எரிச்சல் ஏற்படுத்துகிறார்களாம்.
இதற்கு முன்னர், கே.வி.ஆனந்தும் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்து கதை சொன்னார், ஆனால் அவரிடமிருந்து வேறு எந்த பதிலும் வரவில்லை.
அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அவரை அவர் அழைக்கவே இல்லையென்றும் அதன் பிறகு தான் தெரிந்தது
அதனால் அவரும் அதை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். இருப்பினும், அவர் ஒவ்வொரு புதுப்படத்தை ஆரம்பிக்கும் போதும், ரஜினியை அவர் இயக்குவதாக செய்திகள் வருவது வாடிக்கையாகி விட்டது.
இதனால் அது சம்பந்தமாக செய்திகள் வெளியாவதைக்கண்டாலே, நான் ரஜினி சாரை சந்திக்கவும் இல்லை, கதை சொல்லவும் இல்லை, என்னை விட்டுடுங்கப்பா என்று கடுப்பாகி பேசுகிறார் கே.வி.ஆனந்த்.
No comments: