தனுஷை அதிர்ச்சியடைய செய்த டாணா!
சிவகார்த்திகேயனை 3 படத்தில் காமெடியனாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர் தனுஷ். அதோடு அதையடுத்து தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தவர், இப்போது டாணா என்ற படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
முன்னதாக, தனது தயாரிப்பில் வேலையில்லா பட்டதாரி என்ற படத்திலும் தற்போது நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். வேல்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். இதையடுத்து, அனேகன் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், தனது வேலையில்லா பட்டதாரி படத்தை விற்பனை செய்வதற்காக சில பட நிறுவனங்களிடம் பேசி வருகிறார்.
அப்படி ஒரு நிறுவனத்தை அவர் அணுகியபோது, நீங்கள் நடித்த படத்தை வாங்கி வெளியிட வேண்டுமென்றால், தற்போது சிவகார்த்திகேயனைக் கொண்டு நீங்கள் தயாரித்துவரும் டாணா படத்தையும் எங்களுக்கே தர வேண்டும, அதற்கு உடன்பட்டால், நீங்கள் நடித்த படத்தை வெளியிடுகிறோம் என்று நிர்ப்பந்தம் போட்டு விட்டார்களாம்.
இதனால் ஆடிப்போய் விட்டாராம் தனுஷ். நான் சிவகார்த்திகேயனை விட பெரிய நடிகன். தேசிய விருதுகூட வாங்கியிருக்கிறேன். இதில் அவர் படத்தை தருவதாக ஒத்துக்கொண்டால்தான் என் படத்தை வாங்குவேன் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டாராம். அதற்கு அது அப்படித்தான். அக்ரிமெண்டில் சைன் போட தயாராகுங்கள் என்றார்களாம்.
வேலையில்லா பட்டதாரியை வெளியிட வேறு வழியில்லை என்பதை புரிந்து கொண்ட தனுசும் அந்த கண்டிசனுக்கு ஓ.கே சொல்லிவிட்டாராம்.
Tags »
No comments: