சிவகார்த்திகேயனை அப்ஸெட்டாக்கிய தனுஷ்!
சிவகார்த்திகேயன் நடிக்க கற்றுக் கொண்டாரோ இல்லையோ...மார்க்கெட்டிங் பற்றி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்ளடும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுகிறார். தான் நடித்த படம் வெளியாகும் அன்று முன்னணி நாளிதழ்களில் குறிப்பாக ஆங்கில நாளிதழ்களில், முமுழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதும் சிவகார்த்திகேயனின் முக்கியமான கண்டிஷன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய படங்கள் வெளியான நேரத்தில் சிவகார்த்திகேயன் சொன்னபடியே, முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதைக் கண்டு உச்சி குளிர்ந்துபோனார் சிவகார்த்திகேயன். இனி தான் நடிக்கும் அனைத்துப் படங்களுக்கும் இவ்வாறே மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது தனுஷ் தயாரிப்பில் டாணா படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் விரைவில் வெளிவர உள்ளநிலையில் எப்படி எல்லாம் படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று டாணா படத்தின் இயக்குநரிடம் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த விஷயத்தை டாணா படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் தனுஷ் வசம் சொல்லிவிட்டாராம் இயக்குநர் செந்தில்குமார். சிவகார்த்திகேயன் இப்படி கண்டிஷன் போட்டதை தனுஷ் ரசிக்கவில்லை. எனவே கடுப்பாகிவிட்டாராம். நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் சிவா, விளம்பரம் வியாபாரம் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று நக்கலாக ஒரு எஸ்.எம்.எஸ்ஸை தட்டிவிட்டிருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்!
No comments: