பெண்களை மயக்கி ஆபாசபடம் எடுத்த இளைஞரின் செல்போன் லேப்டாப் ஆய்வு
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரை சேர்ந்த சங்கரதாஸ் மகன் பொன்சிபி (வயது 19). 27-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்ததாகவும் மதுரையை சேர்ந்த ரெஜினா (24) என்ற பட்டதாரி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் அவரிடம் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு துரத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீர் பொன்சிபி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரூரில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப் பட்டார். பொன்சிபிக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஹேமமாலினி, உறவினர் ஞானராஜா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பொன்சிபி பெரும் பாலான பெண்களிடம் இமெயில் மூலம் கிளுகிளுப்பு படங்களை அனுப்பியும் பே புக்கில் சாட்டிங் செய்தும் மயக்கி உள்ளார் என போசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே அவரது இமெயில் ஐடியில் இருந்து யார்? யாருக்கு படங்கள் அனுப்பப்பட்டது. அவரது இமெயில் ஐடியில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுமட்டுமின்றி பொன்சிபி பயன்படுத்தி வந்த பேஸ்புக் தற்போது லாக் செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவி கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் பயன்படுத்தி வந்த 95005 21956, 95003 01309 ஆகிய செல்போன்களில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்தும், அவர் பயன்படுத்தி வந்த லேப் டாப், மெமரி கார்டு, ஐபேடு போன்ற சாதனங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறையில் உள்ள பொன்சிபியை போசார் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: