விசாரணையா... வீட்டுக்கு வாங்களேன்! ப்ரீத்தி அறிவிப்பால் போலீசார் அதிர்ச்சி
மும்பை; பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன் முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது சமீபத்தில், போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நெஸ் வாடியா, தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும், தரக் குறைவாக பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.
புகார் அளித்த அடுத்த நாளே, அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து, இரண்டு நாட்களுக்கு முன், மும்பைக்கு வந்தார் ப்ரீத்தி ஜிந்தா. அவரிடம், புகார் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், இதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அவரை அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தான் பிசியாக இருப்பதாகவும், வேண்டு மானால், வீட்டுக்கு வந்து விசாரணை நடத்துங்கள் என்றும், ப்ரீத்தி கூறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மும்பை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் சர்சசை ஏற்படுத்தியதை அடுத்து, மும்பை வான்கடே ஸ்டேடியத்திற்கு நேற்று மாலை ப்ரீத்தி ஜிந்தா வந்தார். அங்கு, தன்னுடைய புகார் குறித்து மும்பை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
No comments: