புதுப்பட வாய்ப்பு கிடைத்ததால் அஜீத் புகழ் பாடும் த்ரிஷா
பூலோகம்' படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவுக்கு, எந்த புதுப்பட வாய்ப்பும் இல்லை. இதனால், பாலக்காட்டில் உள்ள, தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த படி, மலையாள சினிமாவில் பட வேட்டையில் ஈடுபட்டார்.அப்போது தான், அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில், அனுஷ்காவும் இருந்தாலும், த்ரிஷாவுக்கு தான்,
வெயிட்டான ரோலாம். இதையடுத்து, 'அஜீத்துடன், இது எனக்கு நான்காவது படம். ஏற்கனவே, என் திறமையை அறிந்தவர் என்பதால் தான், அனுஷ்காவை விட வெயிட்டான ரோலில் என்னை நடிக்க வைத்துள்ளார். தல தல தான்' கோலிவுட் வட்டாரங்களில், பில்டப் கொடுக்கிறார் த்ரிஷா.
No comments: