கத்தி படம் வருவதில் சிக்கல்?
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி. துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்+இளைய தளபதி இணைந்திருக்கும் படம், என்பதாலே இப்படத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.ஆனால் இம்முறை கத்தி படம் சுமுகமாக வருமா என்பது கேள்விக் குறி தான். ஏனெனில் தலைவா படத்தில் ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்துடன் வந்து, பல பிரச்சனைகளை சந்தித்தது அனைவருக்கும் தெரியும்.தற்போது சினிமாவின் சேவை வரிகளை நீக்க சொல்லி பிரதமருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கத்தி படத்தின் ரிலிஸ்க்கு மறைமுகமாக ஏதும் பாதிப்பு வருமா என்று நேற்றே சமூக வலைத்தளங்களில் மக்கள் பேச தொடங்கியுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் திரைக்கு வரவேண்டும் என்பதே தளபதியின் கோடான கோடி ரசிகர்களின் விருப்பமும். -
No comments: