ரெட்டுக்கு குடைச்சல் கொடுக்கும் வாரிசு நடிகை!
ரெட் மனிதர் மேனன் நடிகையோடு இன்னும் தொடர்பில் இருப்பது வரம் வாங்கி வந்த லட்சுமிகரமான நடிகைக்கு பிடிக்கவில்லையாம். சூட்டிங் ஸ்பாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மேனன் நடிகையோடு அவர் மணிக் கணக்கில் பேசுவதாக தகவல் வர... இப்போதெல்லாம் ரெட் மனிதர் நடிக்கும் இண்டெழுத்து படத்தின் ஸ்பாட்டுக்கு சென்று ரெட் மனிதருடனேயே இருக்கிறாராம். இது, படத்தை இயக்கும் இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம். ரெட் மனிதரின் மைண்ட் டைவர்ட் ஆவதாக நினைக்கிறாராம். இதனால் ஹீரோவை அழைத்து "நான் வேகமாக படம் எடுக்கிறவன். அதுக்கு இடைஞ்சல் வராம பார்த்துக்குங்க" என்று ஜாடையாக சொல்லிட்டாராம். ரெட் மனிதரோ வாரிசு நடிகையை தவிர்க்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தவிக்கிறாராம்.
No comments: