ஆபாசப்பட விவகாரத்தில் சிக்கிய வாலிபரின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு
திண்டுக்கல்: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான பொன்சிபியின் தாயார் உள்பட 2 பேர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பொன்சிபியால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விபரங்களை பெற புகார் அளித்த ரெஜினாவிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலை சந்திரமோகன் மகள் ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில், திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த பொன்சிபி (19) தன்னை காதலிப்பதாகக் கூறி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதன்பேரில் பொன்சிபி, அவரது தாயார் ஹேமமாலினி மற்றும் ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொன்சிபியை கைது செய்தனர். பொன்சிபியின் செல்போன், இ மெயில் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது மொ பைல் போனில் இருந்த எண்களை அழைத்து போலீசார் ஒவ்வொருவராக விசாரித்து வருகின்றனர். பொன்சிபியின் நண்பர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். விஷயம் வெளியே தெரிந்தால் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்னை எனக்கருதி பொன்சிபியால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் போலீசாரிடம் புகார் அளிக்க தயங்குகின்றனர்.
போலீசார் விசாரித்த சில பெண்கள் தங்களுக்கு பொன்சிபி குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர். இவர்களது முழு விபரங்களை பெற ரெஜினாவிடம் தீவிர விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு வரும்படி ரெஜினாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பொன்சிபியின் தாயார் ஹேமமாலினி, இவருக்கு நெருக்கமானவரான ராஜா ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளனர். முன்ஜாமீன் வழங்கக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெஜினாவிடம் விசாரித்தால் பொன்சிபி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: