நடிகை வேதிகா வாய்ப்பை தட்டி பறித்த நடிகை அருந்ததி
நேற்று இன்று' படம் பார்த்தாலே தெரியும்...அருந்ததி எவ்வளவு துணிச்சலானவர், எதற்கும் துணிந்தவர் என்று! பெங்களூரை சொந்த ஊராக கொண்ட அருந்ததி பட உலகுக்கு அறிமுகமாகும்போது விவரம் போதாதவராகவே இருந்தாராம். இங்கே வந்த பிறகுதான் இதன் நுட்பங்களை புரிந்து கொண்டாராம். புரிதலுக்குப்பின், எப்படி பட வாய்ப்புகளை பிடிப்பது என்பது அவருக்கு கைவந்த கலையாகி விட்டது.
கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான முங்காருமலை கணேஷ் நடிக்கும் 'பொக்ரி' என்ற கன்னட படத்தில், வேதிகாதான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார்.
என்ன நடந்ததோ...? இப்போது அந்த படத்தில் அருந்ததி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ;;வேதிகா கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க முடியவில்லை. அருந்ததி தயாராக இருந்தார். அவரை ஒப்பந்தம் செய்து விட்டோம்'' என்று காரணம் சொல்கிறார்கள், படக்குழுவினர்!
No comments: