ஆச்சர்யம்..ஆனால் உண்மை..! அஜீத் வழியில் சூர்யா!
இளம் கதாநாயக நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் ஒரே நடிகர் அஜீத்குமார்தான் என்பது உலகறிந்த விஷயம். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன் இளமையாக காட்சி அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சூர்யாவிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன் தம்பி கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் சூர்யா. அவரைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யத்தில் திறந்த வாயை மூட வெகு நேரமானது. ஏன்..என்னாச்சு?
முந்தைய நாள் மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரவோடு இரவாக சென்னை வந்தாராம் சூர்யா. அதன் காரணமாகவோ என்னவோ ஷேவ் பண்ணாமல் மெட்ராஸ் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்துவிட்டார். இரண்டு நாள் தாடியோடு காட்சியளித்த சூர்யா, தாடி முழுக்க நரைத்து பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இருந்தார். இதை வைத்து அஜித் வழியில் சூர்யாவும் நடைபோட ஆரம்பித்துவிட்டார் என்று பேச ஆரம்பித்துவிட்டனர்!
No comments: