நயன்தாராவின் புதிய காதலர் கணேஷ் வெங்கட்ராமனா?
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் திரைப்படம் - தனி ஒருவன். இதுவரை ரீமேக் படங்களாகவே இயக்கியதால் ரீமேக் ராஜா என்று பெயர் வாங்கிய ஜெயம் ராஜா, முதல்முறையாக தானே கதை எழுதி இப்படத்தை இயக்கி வருகிறார். தனி ஒருவன் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தாலும், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும் நடிக்கிறார். நட்புக்கும் காதலுக்கும் இடையே சிக்கி தவிக்கும் நயன்தாரா கேரக்டர் மிகவும் சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் படத்தில் நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் இடையில் உண்மையிலேயே நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாம். படப்பிடிப்பின்போது இருவரும் ஒரே கேரவானில் அதிக நேரம் செலவிடுவதாகவும், ஷாட் முடிந்ததும் தனிமையில் பலமணி நேரம் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் கூறுகிறார்கள் தனி ஒருவன் படக்குழுவினர்.
இது எதில்போய் முடியும் என்று தெரியவில்லையே?
No comments: