அரசியல் குறித்து விஜய்யின் சூசக பதில்!
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதும் தெரிந்ததும் விஜயகாந்த் களமிறங்கினார். அவரைத் தொடர்ந்து விஜய்க்கும் அந்த ஆசை பிறந்தது. அதனால் தனது படங்களில் ரஜினி ஒரு காலகட்டத்தில் நடித்தது போன்று பஞ்ச் டயலாக் பேசி நடித்தார். அதோடு, விஜய் மக்கள் இயக்கம் என்றொரு கட்சியை தொடங்கினார். ஆனால், பின்னர் அதை மீண்டும் ரசிகர் மன்றமாக்கினார். இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்படியாக தனக்குள் இருக்கும் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்திக்கொண்டே வருகிறார் விஜய். அதோடு, அவ்வப்போது மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது ரசிகர்கள் எப்போது உங்களது அரசியல் பிரவேசம்? என்று கேட்டதற்கு விஜய் பதிலளிக்கையில், இப்போது என்னால் முடிந்தவரை ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். படிப்பு உதவி, திருமண உதவி, நலத்திட்டங்கள் எனறு செய்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் பெரிய அளவில் சந்தர்ப்பங்கள் அமைகிறபட்சத்தில் இன்னும் அதிகமான அளவில் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் விஜய்.
No comments: