பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் சூர்யா!
இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் காமெடி நடிகர் சத்யன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறாராம். சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தை முடித்தப் பிறகு இப்படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.
No comments: