ஹெட் படத்தில் நடிகைகள் மோதல்.?!
விண்ணைத் தாண்டி வரச்சொன்ன இயக்குனரின் புதிய படத்தில் ஹெட்டுக்கு ஜோடியாக அறடி உசர அருந்ததி மட்டுந்தான் ஹீரோயினா இருந்தார். தீடீர்னு உள்ளே வந்தார் மூணுஷா. சரி சின்ன கேரக்டர்தானேன்னு முதல்ல நினைச்சாராம். ஆனா மூணுஷாவுக்கு பவர்புல்லான ஒரு கேரக்டர் என்பதும். இவர் வெறும் ரொமான்சுக்கும், டுயட்டுக்கும்தான்னு தெரிஞ்சிருக்காம். செம காண்டான நடிகை, ஹெட்டிடம் முறையிட "ரெண்டு பேருக்கும் பேலன்ஸ் பண்ணி சீன் வையுங்க"ன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டாராம்.
இப்போ உசர நடிகை முழு ஸ்கிரிப்டையும் கொடுங்கன்னு கேட்டிருக்காராம். நடிகர்களுக்கு கதைகூட சொல்லாத இயக்குனர், உசர நடிகையிடம் ஸ்கிரிப்டை எப்படி கொடுப்பார். விரைவில் மூணுஷாவுக்கும், உசர நடிகைக்கும் காமினேஷன் சீன் எடுக்கப்போறாங்களாம். என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு.
No comments: