100-க்கும் மேற்பட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது முதியவர் கைது
ரஷ்யாவை சேர்ந்தவர் வேல்ரி மெக்ரன்கோவ் (வய 67). கடந்த மாதம் மாஸ்கோ போலீசார் இவரை கைது செய்தனர்.கடந்த 27 வருடங்களாக இவர் ரஷ்ய போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.இவர் கடந்த 27 வருடங்களில் 108 க்கு அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இவர் முகமூடி அணிந்து கொண்டு பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்.மேலும், பலாத்காரத்திற்குப் பின் அப்பெண்களின் நகைகளையும் இவர்கொள்ளையடித்து உள்ளார்.
கடந்த மாதம் 29 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அப்பெண் இவருடைய முகமூடியை அகற்றியதோடு போலீசாரிடமும் காட்டி கொடுத்தார்.
நீண்ட காலமாக போலீசில் சிக்காமல் தப்பித்துவந்த இவர் போலீசிடம் சிக்கி கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடைய பிறந்த நாளன்று எப்போதும் இவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பிறந்தநாள் பரிசாக தன்னையே பெண்களுக்கு அர்ப்பணித்தாகவும் கூறி தன்னுடைய செயலை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார்.தற்போது, இவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments: