சூர்யாவை புரிந்துகொள்ள முடியவில்லை!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். மணி ரத்னத்திற்கு பிறகு மௌனத்தையும் அழகாக காட்டுவது என்றால் இவர் தான்.சூர்யாவை வைத்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமில்லாமல், இப்படங்கள் சூர்யாவின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே தூக்கி சென்றது என்று சொன்னால் கூட மிகையாகது.ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்த நிலையில்,தற்போது கௌதம் ஒரு பேட்டியில் சூர்யா பற்றி மனம் திறந்துள்ளார். இதில் ‘சூர்யா எந்த மாதிரி கதையை தேர்ந்தெடுப்பார், அவருடைய ஸ்டைல் என்ன, எனபது அனைத்தும் எனக்கு தெரியும் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தான் நிஜம், மேலும் வாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
No comments: