வில்லனாக அவதாரமெடுக்கிறார் மைக் மோகன்!
980களில் வெற்றிவிழா நாயகனாக வலம் வந்தவர்தான் மோகன். அவர் மைக்கைப்பிடித்து பாடினாலே அந்த பாடல் சூப்பர் ஹிட் என்கிற நிலை அப்போது இருந்தது. அந்த நேரத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் எனக்காக பிறந்தவர் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மோகன். அந்த அளவுக்கு மோகனுக்காக எஸ்.பி.பி., பாடிய அனைத்து பாடல்களுமே செண்டிமென்டாகவே ஹிட்டடித்து வந்தன.
ஆனால், காலகட்டங்கள் மாறியபோது, மோகன் நடித்த படங்கள் தோல்வியடைந்ததோடு குறுகிய காலத்திலேயே காணாமல் போய் விட்டார். இருப்பினும் தன்னை மீண்டும் சினிமாவில் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அன்புள்ள காதலுககு என்றொரு படத்தை இயக்கி நடித்தார் மோகன். ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லை.அதையடுத்து அவர் நடித்த சுட்டப்பழம் என்ற படமும் கையை சுட்டு விட்டது. இப்படி மீண்டும் மீண்டும் விழுந்த அடியால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறிப்போய் நின்று கொண்டிருக்கிறார் மோகன்.
இந்த நேரததில், சூர்யாவைக்கொண்டு தான் இயக்கும் பேய் படத்தில் மோகனை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க பேசியிருக்கிறாராம் வெங்கட்பிரபு. அதனால் பாடும் வானம்பாடியாக இருந்த மைக் மோகன், கொடூர வில்லனாக அவதரிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, முழுநேர வில்லனாக நான் தயார், எனக்கு வில்லன் வேடம் கொடுக்க நீங்கள் தயாரா என்று கோடம்பாக்க டைரக்டர்களைக் கேட்டுக்கொண்டு வருகிறார் மோகன்.
No comments: