ரஞ்சிதாவை தொடந்து ரம்யா...எல்லாம் அவன் செயல்
குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி குத்து ரம்யா என்ற பெயரில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திவ்யா ஸ்பந்தனா. பிரபல நடிகையாக திகழ்ந்த காலத்தில் அரசியல் மோகம் காரணமாக சினிமாவில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லை. அரசியல் மோகம் அவர் ரத்தத்தில் ஊறினது, ஏனென்றால் அவருடைய தாத்தா ஒரு அரசியல்வாதி கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தாத்தா எஸ்.எம். கிருஷ்ணாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த முறை எம்.பி. இடைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தார்.பாராளுமன்றத்துக்கு போகும் முதல் இளம் வயது எம்.பி. என்ற பெருமையும் அவருக்கு வந்தது. அதற்கு பிறகு அரசியல் தான் எனது வாழ்க்கை என்று சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டார்.ஆனால் அவர் போட்ட கணக்கு தப்பாக போனது.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே மாண்டியா தொகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் இந்த முறையோ ரம்யா தோற்றுப்போனார். அதுவும் உங்க வீட்டு, எங்க வீட்டு தோல்வியில்லை, மிக மோசமான தோல்வி.இதனால் நொந்து நூலான ரம்யா எங்கே செல்லும் இந்த பாதை என்ற போக்கில் சிறிது காலம் மீடியா கண்ணில் படாமல் இருந்துள்ளார் ,இந்த நிலையில் சோகம் முத்திப்போன காரணமாக ஆன்மீகத்தின் பக்கம் போய்விட்டாராம் நடிகை ரம்யாவை சமீபத்தில் பகிரிந்து உள்ள செய்தி இது. சந்தோசத்தில் இருக்கும் போது யாரும் கடவுளை நினைப்பது கிடையாது. கஷ்டம் அல்லது தோல்வி வரும் போது தான் அனைவருக்கும் கடவுளின் நினைப்பு வருகின்றது. அது நடிகையாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் ஒரே நிலைமை தான். எனவே நான் ஆன்மிக பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளேன் என ரம்யா கூறியுள்ளாராம்
No comments: