நீண்ட நாள் கனவு நனவானதுலட்சுமி மேனன் பெருமிதம்
இசையமைப்பாளர் இமானுக்கு, லட்சுமி மேனன் மீது என்ன கோபமோ தெரியவில்லை. 'படப்பிடிப்பு, பள்ளி, வீடு' என, நல்ல பிள்ளையாக இருக்கும் அவருக்கு, பாட்டுப் பாடும் ஆசையை ஏற்படுத்தி விட்டார். புதிதாக உருவாகும் ஒரு படத்தில், ப்ரியா ஆனந்துக்காக, ஒரு பாடலை பாடும்படி, லட்சுமி மேனனை கேட்க, அவரும், ஓகே கூறி விட்டார். பாடலை பாடி முடித்ததும், லட்சுமி மேனனுக்கு தலைகால் புரியவில்லையாம். இதனால், தொடர்ந்து, நல்ல பாடல்களாக பாடப் போவதாகவும், அதிலும், தான் நடிக்கும் படங்களில், கட்டாயம் பாடப் போவதாகவும் கூறி வருகிறாராம். 'சினிமாவில் பாட வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு. அது, இப்போது நனவாகி விட்டது' என்கிறார்.
No comments: