காருக்குள் இரு பெண்களுடன் உல்லாசம்: உயிருக்கு போராடும் இளைஞர் - video
சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ(27), மற்றும் டாய் லெய்(23) ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார்.
காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு விலகி, மலைப்பாதையில் உருண்டு, ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தால் காரினுள் இருந்த மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மீட்புப் படையினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மீட்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து, காரின் கதவை உடைத்து மூவரையும் படுகாயத்துடன் வெளியே கொண்டுவந்தனர்.
இதன்போது தான் மூவரும் காரினுள் நிர்வாணமாக இருந்துள்ளார்கள் என தெரியவந்தது. தற்போது சீன மருத்துவமனையில் மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் சுங் ஹே கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments: