Header Ads

சேலை கட்டினால் கூட, என்னை கவர்ச்சியாகவே பார்க்கிறார்கள் -நடிகை லட்சுமிராய்

சேலை கட்டினால் கூட, என்னை கவர்ச்சியாகவே பார்க்கிறார்கள். என் ராசி அப்படி என்று நடிகை லட்சுமிராய் கூறினார்.

பேட்டி

நடிகை லட்சுமிராய், தினத்தந்தி நிருபருக்கு  பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு லட்சுமிராய் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் பெயரை, ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டது எதற்காக? ஜோதிடர் சொன்னதற்காகவா?

பதில்:- சின்ன வயதில் என்னை எல்லோரும் ராய் என்றுதான் அழைப்பார்கள். தோழிகள், ஹாய் ராய் என்பார்கள். வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி, ராய் என்ற பெயர்தான் பழக்கத்தில் இருந்தது. சினிமா உலகில் என் இரண்டாவது இன்னிங்ஸ்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். புதிய பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. கொஞ்சம் குண்டாக இருந்த நான் 15 கிலோ எடையை குறைத்து, புதிய தோற்றத்துக்கு வந்து இருக்கிறேன். ஒல்லியாகி விட்டேன். அதனால், ராய் லட்சுமி என பெயரை மாற்றிக்கொண்டேன். இதற்கும், ஜோதிடத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழ் படங்கள்

கேள்வி:- தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டீர்களா?

பதில்:- நான் நடித்த அரண்மனை,இரும்புக்குதிரை ஆகிய 2 தமிழ் படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. எல்லாமே பெரிய செட்-அப் படங்கள். அவை திரைக்கு வருவதில் காலதாமதம் ஆவதால் தமிழ் படங்களில் நான் நடிக்காதது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. இவை தவிர, கன்னடத்தில் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன்.

No comments:

Powered by Blogger.