பாலாவின் இயக்கத்தில் ஷாம் மற்றும் ஜெயம் ரவி
இன்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரவிருக்கும் சலீம் படத்துடைய இசை வெளியிட்டு விழா சத்யம் திரையரங்கில் நடை பெற்றது .இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா அழைக்கப்பட்டார் மற்றும் ஷாம் ,ஜெயம் ராஜா போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றனர். நடிகர் ஷாம் பேசுகையில் எனக்கு இன்று காலை பாலா சார் படத்தில் நடிப்பது போல் கனவு கண்டேன் , அதே போல் ஜெயம் ராஜா நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு பாலாவிடம் என் தம்பியும் உங்கள் படத்தில் நடிக்க வைப்பீங்களா என்று கேட்டு கொண்டார் அதன் பிறகு ஆடியோ விழாவில் பாலா பேசுகையில் படத்தை பற்றி பேசுவதற்கு முன்பு சாம் கண்டிப்பா உன்ன என் படத்தில் நடிக்க வைக்கிறேன் உன்னுடைய "6 மெழுகுவத்தி" படத்தை நான் பார்க்க வில்லை ஆனால் பல பேர் சொல்லி கேள்வி பட்டுருக்கிறேன் அதே போல் ஜெயம் ராஜா விரைவில் உன் அப்பாவை வந்து சந்திக்கிறேன் என்று கூறினர் ஆகமொத்தத்தில் பாலாவின் நடிப்பில் இவர்கள் இரண்டு போரையும் விரைவில் பார்க்கலாம் போல -
No comments: