Header Ads

விஜய் ஜோடியாக ஸ்ரீதேவி...?!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படம் முடிவடைந்த பிறகு சிம்பு தேவன் படத்தில் நடிக்கிறார் விஜய். தெலுங்கு மகதீரா டைப்பிலான ஸ்கிரிப்டை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டார் சிம்பு தேவன். பூர்வ ஜென்மத்தில் மன்னர் பரம்பரையில் நடுத்தர வயது நேர்மையான மன்னராக விஜய் நடிக்கிறாராம். அந்த பூர்வ ஜென்ம விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஸ்ரீதேவி. இவர்களது மகனான விஜய்தான் இந்த ஜென்மத்தில் பிறக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்கலாம் என்கிறார்கள். இரண்டுக்கும் ஜென்மத்துக்கும் என்ன தொடர்பு, என்ன பிரச்சினை என்பதுதான் பேண்டஸி கதையின் சீக்ரெட். 

விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பதை அவரது கணவர் போனி கபூர் உறுதி செய்திருக்கிறார் "விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது உண்மை. இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்" என்கிறார் போனி கபூர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னனியாக இருந்த ஸ்ரீதேவி அதன் பிறகு இந்தி சினிமாவில் நம்பர் ஒண் நாயகியாக வலம் வந்தார். 1986ம் ஆண்டு வெளிவந்த நான் அடிமை இல்லைதான் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த தமிழ் படம். 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

No comments:

Powered by Blogger.